துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரகுநாதன் என்பவர் தயாரிக்கிறார். சரவணன், ஜாக்குலின், டேனியல், மைனா நந்தினி, சிங்கம் புலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நடிகர்கள் அந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது சேரன் கீழே விழுந்து அவருக்கு 8 தையல் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குனர் நந்தா பெரியசாமி கூறியபோது "தயாரிப்பாளர் ரகுநாதன் இந்தப் படத்திற்காக செட் அமைப்பதற்கு பதிலாக 80 லட்சம் ரூபாய்க்கு புதிதாக பெரிய பிரம்மாண்டமான வீடு கட்ட ஆரம்பித்தார். அந்த வீடுதான் கதைக்களம். கதைப்படி சேரன் வீட்டை சுற்றி பார்க்கும் போது கீழே விழுமாறு காட்சி. சரவணன் அண்ணனாகவும் சேரன் தம்பியாக நடித்து வருகின்றனர். கீழே விழும் காட்சியில் சேரன் நிஜமாகவே வழுக்கி விழுந்துவிட்டார் . அவருக்கு எட்டு தையல் போடப்பட்டது. தையல் போடப்பட்ட அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நடித்துக் கொடுத்தார். இன்று காலை தான் அவருக்கு தையல் பிரிக்கப்பட்டது. அந்த வலியிலும் கடந்த மூன்று நாட்கள் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தார். இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று தெரிவித்தார். எல்லாம் முடிந்த பிறகு தான் நான் சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.