வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழ் சினிமா நடிகர் என்று சொல்ல முடியாதபடி, பாலிவுட், ஹாலிவுட் என சென்றுவிட்ட தனுஷ், அடுத்து டோலிவுட்டிற்கும் செல்ல இருக்கிறார். ஓடிடியில் வெளியான 'ஜகமே தந்திரம்' படத்திற்குப் பிறகு, தனுஷ் நடித்து வெளிவர உள்ள படம் 'மாறன்'. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.
இதற்கடுத்து தனுஷ், அவரது அண்ணன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் ஆகஸ்ட் 20 முதல் நடிக்கப் போகிறார் என இரண்டு மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், இந்தப் படத்திற்கு முன்னதாக தனுஷ் அடுத்து நடிக்க உள்ள அவரது 44வது படம் முதலில் வெளிவரும் எனத் தெரிகிறது. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்க உள்ள படம் இது.
44வது படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்துள்ளதாக இன்று ஒரு அப்டேட்டைக் கொடுத்தார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்த இரண்டு படங்களிலும் ஒரே சமயத்தில் தனுஷ் நடிக்கலாம் எனத் தெரிகிறது. இவற்றிற்கான படப்பிடிப்பை இந்த வருடத்தில் முடித்துவிட்டு அடுத்த வருடம் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ள பான்-இந்தியா படத்திலும், அதற்கடுத்து மற்றொரு தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறாராம் தனுஷ். இந்த இரண்டு படங்களுக்கும் 2022ம் ஆண்டு சரியாகப் போய்விடும்.
அதன்பின் 2024ல் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்ட 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தில் மீண்டும் செல்வராகவனும், தனுஷும் இணைய உள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 2023ம் ஆண்டு ஆரம்பமாகலாம்.
இத்தனை படங்களுக்கு இடையில் வேறு சில படங்களிலும் நடிக்க தனுஷ் ஏற்கெனவே பேசி வருவதாகவும், சில படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
ஹாலிவுட்டில் நடித்த 'த கிரே மேன்', பாலிவுட்டில் நடித்த 'அத்ராங்கி ரே' ஆகியவை வெளிவந்தால் தனுஷின் மார்க்கெட் நிலவரம் இன்னும் உயரலாம்.