ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் சூப்பர் ஹிட்டான ஒரு பாடல். அப்பாடல் கிரிக்கெட் பிரபலங்களின் மத்தியிலும் மிகவும் பிரபலமான ஒன்று. இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் அவர்களது பயிற்சியின் போது அப்பாடலுக்கு நடனமாடியதை வீடியோவாகப் பகிர்ந்திருக்கிறார்கள்.
படம் வெளிவந்து ஏழு மாதங்களாகியும் அந்தப் பாடல் மீது உள்ள மோகம் இன்னும் குறையவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரரும், ஐபிஎல் ஐதரபாத் அணியின் வீரருமான டேவிட் வார்னர் இதற்கு முன்பு சில தெலுங்குப் பாடலுக்கு குடும்பத்தினருடன் நடனமாடி வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். இன்று 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டு விஜய் ரசிகர்களை டிரெண்ட் செய்ய வைத்துவிட்டார்.
'வலிமை' சிங்கள் வெளியீட்டிற்குப் போட்டியாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த விஜய் ரசிகர்களுக்கு தனது 'வாத்தி கம்மிங்' வீடியோ மூலம் வழி காட்டியிருக்கிறார் டேவிட் வார்னர்.