போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ்த் திரையுலகத்தில் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ள இன்றைய தலைமுறை நடிகர்களில் அஜித் முக்கியமானவர். இவர் திரையுலகத்திற்கு வந்து நாளை 30வது வருடம் ஆரம்பமாவதை முன்னிட்டு ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
ஆகஸ்ட் 3, 1992, அன்று தான் அஜித் 'பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால், தமிழில் அவர் கதாநாயகனாக நடித்த 'அமராவதி' படம் தான் முதலில் வெளியானது.
அந்த நாளைக் கொண்டாடும் விதத்தில்தான் 'வலிமை' படத்தின் முதல் சிங்கிள் பாடலை இன்று வெளியிடுகிறார்களாம். அஜித்தின் ராசியான இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜா அது குறித்து டுவிட்டரில், “வலிமை முதல் சிங்கிள் பாடலுக்குத் தயாராக இருங்கள். அஜித்குமாரின் 30 ம் வருடம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று இரவு வெளியாக உள்ள முதல் சிங்கிள் பாடலான 'வேற மாறி' பாடலை விக்னேஷ் சிவன் எழுத, யுவனே பாடியுள்ளார். டுவிட்டரில் இன்று காலை முதலே 'வலிமை' குறித்த ஹேஷ்டேக்குகள்தான் டிரெண்டிங்கில் உள்ளன.