2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. தொடர்ந்து அவர் காமெடி படங்களில் நடித்தாலும் மண்டேலா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது வெளியாக உள்ள நவரசா அந்தாலஜி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது சின்னத்திரையிலிருந்து ஏராளமான காமெடி நடிகர்கள் புதிதாக வருவதால் தன்னை ஒரு குணசித்ர நடிகராக முன்னிறுத்திக் கொள்ள நினைக்கிறார் யோகி பாபு. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாப்பாத்திரங்கள் மிக வலிமையானது. அத்தனை எளிதில் அனைவரும் செய்துவிட முடியாதது. ஆனாலும் பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் அனைத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் குணச்சித்திர பாத்திரங்களில், நடிப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன்.
நகைச்சுவையில் சாதனை படைத்த , தமிழ்சினிமாவின் மூத்த ஆளுமைகளான நாகேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் காமெடியில் மட்டுமல்லாமல், பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து, நம் மனதை கவர்ந்துள்ளனர். ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தில் கவுண்டமணியும், நீர்க்குமிழி படத்தில் நாகேசும் குணச்சித்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார்கள். அப்படங்களும் மிகப்பெரும் வெற்றியை பெற்றன. அதே போல் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன் யடப என்கிறார் யோகி பாபு.