ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் பாடலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து சென்றிருக்கும் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வென்று வா வீரர்களே என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து, பாடி வெளியிட்டுள்ளார்.
இந்த ஆல்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த பாடலை முதல்வர் நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் யுவன் சங்கர் ராஜா பங்கேற்கவில்லை.