இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா உள்பட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தற்போது கடமையை செய், பாம்பாட்டம் உள்பட ஐந்து படங்களில நடித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு தனது நண்பர்களுடன் சென்னையை நோக்கி காரில் வந்தபோது மகாபலிபுரம் அருகே சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிகழ்விடத்திலேயே யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை யாஷிகா தான் ஓட்டி வந்துள்ளார். இதனால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சிகிச்சையில் உள்ள யாஷிகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் காரை தான் ஓட்டி வந்ததாக கூறியுள்ள யாஷிகா, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது. என் தோழி சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார் என்று போலீசாரிடம் நடந்ததை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் யாஷிகாவின் ஓட்டுனர் உரிமத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனராம்.
மேலும், இந்த கார் விபத்தில் யாஷிகா ஆனந்தின் வலது கால் எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதால அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து யாஷிகாவின் சினிமா தோழியான நடிகை ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா நலமுடன் இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பவர், அவர் விரைவில் பூரண குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.