குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் | இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' |
2025ம் ஆண்டில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கைந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வாரங்களில் அதைவிட அதிகமான படங்களும் வெளிவருகிறது.
நேற்று, “காந்தி கண்ணாடி, மதராஸி, திறந்திடு கதவே திறந்திடு' ஆகிய நான்கு படங்கள் வெளியாகின. அவற்றுடன் சேர்த்து இந்த வருடம் வெளியான படங்களின் எண்ணிக்கை 180த் தொட்டுவிட்டது. இந்த மாதத்திலேயே அது 200ஐக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் செப்டம்பர் 12ம் தேதி, “அந்த 7 நாட்கள், பிளாக்மெயில், பாம், தாவுத், குமாரசம்பவம், தணல், உருட்டு உருட்டு, யோலோ,” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில படங்களுக்கு இன்னும் தியேட்டர்கள் ஒப்பந்தம் முழுமையாக முடியவில்லை. அறிவித்தபடி அனைத்து படங்களுமே வெளியாகுமா அல்லது அவற்றில் ஒரு சில பின்வாங்குமா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
அடுத்த மாதம் அக்டோபர் 1ம் தேதி தனுஷ் நடித்த 'இட்லி கடை' படமும், பின்னர் தீபாவளிக்கு நான்கைந்து படங்களும் வெளியாக உள்ளது. அதனால், கிடைக்கும் இடைவெளியில் சிறிய படங்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 250ஐக் கடந்து புதிய சாதனை படைக்கப் போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.