ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழக அரசியல் அரங்கில் விஜய் வருவாரா, மாட்டாரா என கடந்த சில வருடங்களாகவே ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. அவரது ரசிகர்களை விஜய்யை 'இளைய தளபதி' என அழைத்து வந்ததை சில வருடங்களுக்கு முன்பு 'தளபதி' என மாற்றி அழைக்க வைத்தார் விஜய்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக விஜய் பெயரில் கட்சியைப் பதிவு செய்து சர்ச்சைக்கு உள்ளானார் விஜய்யின் அப்பா. புதிதாகப் பதவியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் இதுவரை விஜய் சந்தித்து கொரானோ நிவாரண நிதி வழங்கவில்லை என்ற ஒரு சர்ச்சையும் நிலவி வருகிறது.
இந்தநிலையில் சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் விஜய்யும் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு வந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் விஜய்யிடம் நற்பெயரை வாங்குவதற்கு பரிசுகளை வழங்கி வருவதாகத் தெரிகிறது- கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், விஜய்யின் ஆளுயர சிலை அவருக்கு பரிசளித்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் அந்த சிலை பற்றிய செய்தி வைரலாகப் பரவி வருகிறது.