கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் |

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனா. திரைப்படங்களில் நடித்தும் வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூளைக்கு அருகே ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஆபரேஷன் முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி உள்ளார்.
இது தொடர்பாக அர்ச்சனா கூறுகையில், அர்ச்சனா எப்படி இருக்காங்கன்னு எல்லாரும் கேட்கிறாங்க. அர்ச்சனா ஒரு தொகுப்பாளினி தான் ஆனால் அவளுக்காக எல்லாரும் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களுக்கு எனது நன்றி. என்னை குணப்படுத்திய மருத்துவமனைக்கு நன்றி. கொரோனா பரிசோதனைக்காகத்தான் ஆஸ்பத்திரிக்கு போனேன். ஆனால் 24 மணி நேரத்தில் பல பரிசோதனைகள் செய்து மூளையில் இருக்கும் பிரச்சினையை கண்டுபிடித்தார்கள்.
வாழ்க்கையில் நாளை என்பதில்லை. இன்றைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் நான் உணர்ந்தது. யாரையும் வெறுக்காதீர்கள், எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள். கடவுளால் எல்லா இடத்திலும் இருக்க முடியாது. அதனால் தனது தூதர்களாக டாக்டர்களையும், செவிலி தாய்களையும் அவர் படைத்துள்ளார். இது இறைவன் எனக்கு கொடுத்த மறுஜென்மம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.