நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' |

நெட்பிளிக்சில் வெளிவரவிருக்கும் ஒன்பது பகுதி ஆந்தாலஜி திரைப்படமான, நவரசாவின் ஒரு பகுதியாக உருவாகியுள்ள படம் இன்மை. இதில் சித்தார்த், பார்வதி நடித்துள்ளனர். ரவீந்திரன் பிரசாத் இயக்கி உள்ளார்.
படத்தில் நடித்திருப்பது பற்றி சித்தார்த் கூறியிருப்பதாவது : மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா எனக்கு இன்மை வாய்ப்பை வழங்கியபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். நவரசங்களில் ஒரு உணர்வை குறிக்கும் இன்மை என்பதின் அர்த்தம், ஏதும் இல்லாதது என்பதாகும்.
இன்மை என்ற வார்த்தையைக் கேட்கும்போதே மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். கொரோனாவால் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள, திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாக, இத்திரைப்படம் உருவாகியுள்ளது. பார்வதி திருவோத்துவுடன் இணைந்து நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். என்றார்.