ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ராதே ஷ்யாம், ஆச்சார்யா, பீஸ்ட் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள பூஜாஹெக்டே, தடுப்பூசி போடும்போது அருகில் இருந்த தனது தாயாரை பிடித்துக் கொண்டுள்ளார். அதைப்பார்க்கையில், பூஜாவுக்கு ஊசி போடுவது பயம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதோடு தனது இரண்டு வயதில் தனக்கு தடுப்பூசி போட்டதையும் இந்த தருணத்தில் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்கு உள்ளான பூஜா ஹெக்டே, அதையடுத்து சிகிச்சைக்குப்பிறகு நோய் தொற்றில் இருந்து மீண்டார் என்பது குறிப்படத்தக்கது.