பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ரஜினி, கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த திங்கள் அன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை நடத்துவதற்கு முன்னர் தான் அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஆலோசனைக்கு பின்னர் ரஜினி வெளியிட்ட அறிக்கையில் வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே ரஜினி மக்கள் மன்றத்தை மீண்டும் ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றுவதாக அறிவித்தார்.
இதற்கான பின்னணி காரணம் குறித்து ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறியதாவது : மக்கள் மன்றமாக இருக்கும் வரை அரசியல் குறித்த சந்தேகம் நீடித்துக் கொண்டே இருக்கும். நம் நிர்வாகிகள் பிற கட்சிகளில் சேரும்போது ரஜினி மன்றத்தில் இருந்து வந்ததாக சொல்வார்கள். உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரை பயன்படுத்தி சிலர் களம் இறங்க வாய்ப்பு உண்டு. கட்சி தொடங்குவதற்காக ஆயிரக்கணக்கான பூத் கமிட்டிகளை உருவாக்கி இருக்கிறோம். அவர்களை விடுவித்து சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு செல்ல விரும்புபவர்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். எனது ரசிகர் மன்றத்தில் அரசியல் சார்பு இன்றி மக்கள் பணியாற்ற விரும்புபவர்கள் மட்டும் என்னுடன் இருக்கலாம் என்றார். நாங்கள் உருக்கத்துடன் உங்களுடன் தான் இருப்போம் என்று ஒருமித்த குரலில் சொன்னோம் என்றனர்
ரஜினி மன்ற வாட்ஸ் அப் குரூப்கள் கலைப்பு
இதனிடையே அரசியல் கட்சிக்கான கட்டமைப்பு பணிகள் நடந்தபோதே மக்கள் மன்றம் தனியாகவும், ரசிகர் மன்றம் தனியாகவும் தான் இயங்கி வந்தன. இரண்டுக்கும் தனித்தனி நிர்வாகிகள், தனித்தனி வாட்சப் குரூப்கள் இருக்கின்றன. கடந்த வார அறிவிப்புக்கு பின்னர் மக்கள் மன்ற வாட்சப் குரூப்களில் இருந்து நிர்வாகிகள் விலக தொடங்கி விட்டனர். 80 சதவீத வாட்சப் குரூப்கள் கலைக்கப்பட்டு விட்டன. ரசிகர் மன்ற வாட்சப் குரூப்களில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.