''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி |
தெலுங்கில் பிரம்மாண்டமான தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் படம் 'சாகுந்தலம்'. குணசேகர் இயக்கி வரும் இப்படத்தின் கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார். காளிதாஸ் எழுதிய 'சாகுந்தலா'வை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. துஷ்யந்த் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அனுசுயா கதாபாத்திரத்தில், 'அருவி' படத்தில் நடித்த அதிதி பாலன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தற்போது இப்படத்தில் கூடுதலாக ஒரு ஸ்டார் அட்ராக்ஷன் இணைக்கப்பட்டிருக்கிறார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா, 'பரதா' கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று முதல் அர்ஹா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அடுத்த பத்து நாட்கள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாம்.
இதன் மூலம் அல்லு குடும்பத்தில் நான்காவது தலைமுறையிலும் நடிக்க வந்துவிட்டார்கள். அர்ஹா சினிமாவில் நடிக்க வந்துள்ளதற்கு தெலுங்குத் திரையுலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.