என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் |
திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதும், ஆட்சியை பிடிப்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்டு ரீகன் என்ற நடிகர் இருந்தார். அமெரிக்காவின் ஒரு மாகாணத்துக்கு கவர்னராக அர்னால்ட் இருந்தார். அந்த வரிசையில் தற்போது ஜாக்கிசானும் அரசியலுக்கு வருகிறார்.
ஹாங்காங்கை சேர்ந்த ஜாக்கிசானுக்கு இப்போது 67 வயதாகிறது. ஜாக்கிசான் என்றாலே ஆக்ஷன் படங்கள் தான். முதுமை காரணமாக அவரால் தற்போது ஆக்ஷன் படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் இனி அரசியலில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார். தற்போது சீன திரைப்பட சங்க துணை தலைவராக இருக்கும் ஜாக்கிசான், பெய்ஜிங்கில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது தான் விரைவில் நேரடி அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்தார்.
அவர் பேசியதாவது: சமீபகாலமாக சீனா வேகமாக முன்னேறி வருவதை பல நாடுகளுக்கு நான் செல்லும்போது உணர முடிகிறது. நான் சீன குடிமகனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். உலகம் முழுவதும் 5 நட்சத்திரங்கள் கொண்ட சிவப்புக் கொடிக்கு மரியாதை கிடைக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை மிகக்குறைந்த காலத்திலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றி வருகிறது. அந்த கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக இருக்கிறேன். சினிமாவில் நான் நினைத்ததையெல்லாம் சாதித்து விட்டேன். அதனால் இனி வரும் காலங்களில் தீவிர அரசியலில் ஈடுபட விரும்புகிறேன். என்றார்.