ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், மோஷன் போஸ்டர் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென வெளியிடப்பட்டது.
அவற்றிற்கு ரசிகர்களிடமிருந்து இரு விதமான விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் மோஷன் போஸ்டர், யு டியூபில் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றதைத் தொடர்ந்து அதற்காக சில போஸ்டர்களை வெளியிட்டது படக்குழு.
அவற்றைப் பார்த்த ரசிகர்கள் இந்த போஸ்டர்களை முதல் பார்வை போஸ்டர்களாக வெளியிட்டிருக்கக் கூடாதா என ஆதங்கப்பட்டனர். பைக்கில் ஸ்டைலாக உட்கார்ந்திருக்கும் அஜித்தைப் பார்க்க ஹாலிவுட் நடிகரைப் போல அவ்வளவு அழகாக இருக்கிறார். முதல் பார்வை போஸ்டரை விட இந்த போஸ்டர் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது.
முதல் போஸ்டரை அடுத்து படத்தின் டீசர், முதல் சிங்களி டிராக் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவற்றையாவது தாமதமில்லாமல் சரியான நேரத்தில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.