டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
'சும்மாவே சலங்கை கட்டி ஆடுவார்கள்', இப்போது ஒரு விவகாரம் சிக்கியிருக்கிறது என்றால் சும்மா இருப்பார்களா ?. டுவிட்டரில் “'வரி கட்டுங்க விஜய், WeSupportThalapathyVijay” என டிரென்டிங் போய்க் கொண்டிருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி செய்த விவகாரத்தில் விஜய்க்கு நீதிபதி கண்டனம் தெரிவித்து ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார். இதைத் தொடர்ந்து டுவிட்டரில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் 'வலிமை' முதல் பார்வை போஸ்டர் வெளியான போது அதற்கு விஜய் ரசிகர்கள் கடும் கிண்டலடித்தனர். மீண்டும் 'விவேகம்' பட போஸ்டரைப் பார்த்தது போல இருந்தது என்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள் 'வரி கட்டுங்க விஜய்' என டிரென்டிங் செய்ய, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் 'WeSupportThalapathyVijay' என்றும், #கடனைஅடைங்க_அஜித் என்றும் டிரென்டிங் செய்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.
இன்னும் சில நாட்களில் 'பீஸ்ட்' படத்தின் முக்கியமான ஒரு அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதனால், இந்த வாரத்தில் அடிக்கடி இப்படியான எதிரும், புதிருமான டிரென்டிங்குகளை நிறையவே பார்க்கலாம்.