திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி மற்றும் பலர் நடித்து வரும் படம் 'வலிமை'. இப்படத்தின் அப்டேட்டிற்காக அஜித் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மே மாதம் 1ம் தேதி அஜித் பிறந்தநாளன்று வர வேண்டிய அப்டேட் கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அந்த அப்டேட்டை இன்னும் கொடுக்கவில்லை தயாரிப்பாளர்.
இதனிடையே, படத்தின் விடுபட்ட காட்சிகளை படமாக்க இன்று ஐதராபாத்தில் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி உள்ளதாம். சில நாட்கள் மட்டும் அப்படப்பிடிப்பு நடக்குமாம். அதன்பிறகு கடைசி கட்டமாக எடுக்கப்பட வேண்டிய அந்த சண்டைக் காட்சியை படமாக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
படப்பிடிப்பை முழுவதுமாக நடத்தி முடித்த பிறகுதான் 'வலிமை அப்டேட்' கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இருந்தாலும் ஜுலை 15ம் தேதி அந்த அப்டேட் வரும் என்ற தகவல் பரவியுள்ளது.