மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை |
தெலுங்கில் உருவான 'பாகுபலி' இரண்டு பாகங்களும், இந்தியா முழுவதும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலைக் குவித்தது. அந்தப் படத்தில் நடித்த பிரபாஸுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்தார்கள். அவரது வியாபார எல்லையும் விரிவடைந்து, அவரது சம்பளமும் உயர்ந்தது.
அந்த ஆசையில் தெலுங்கில் பல நடிகர்கள் தற்போது தங்களது படங்களை பான்-இந்தியா படமாக உருவாக்கி வருகிறார்கள். தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து வரும் 'புஷ்பா' படத்தையும் அப்படித்தான் வெளியிட உள்ளார்கள். ஆனால், ஹிந்தியில் படத்தை வெளியிட இன்னமும் சரியான வினியோகஸ்தர் கிடைக்கவில்லையாம்.
'பாகுபலி' படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் வெளியிட்டார். அது போல தங்களது படத்திற்கும் பிரபலமான நிறுவனம் வெளியிட்டார்தான் வரவேற்பு அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
கேஜிஎப் 2 படத்தை பிரபல பர்ஹான் அக்தர் நிறுவனமும், 'லிகர்' படத்தை கரண் ஜோஹர் நிறுவனமும் ஹிந்தியில் வெளியிடுகிறது. அது போல தங்களது 'புஷ்பா' படத்திற்கு பெரிய நிறுவனத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.
அல்லு அர்ஜுனின் தெலுங்குப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியுபில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.