தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது சகோதரி மகன் சசிவர்ஷனை (வயது 10) மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அண்ணா சாலையில் சென்றபோது பின்னால் இருந்த சிறுவன் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தான்.
உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வலியால் துடித்த சிறுவன், சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் உளவியல் ரீதியான சிகிச்சை ஒன்றை மேற்கொண்டனர்.
சிறுவனுக்கு பிடித்த விஷயம் எதுவென்று விசாரித்தனர். அவன் விஜய்யின் தீவிர ரசிகன் என்றும், அவனுக்கு பிடித்தது பிகில் படம் என்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து டாக்டர்கள் செல்வோனில் பிகில் படத்தை சிறுவனுக்கு காட்டினர். அவன் அந்த படத்தை சிறுவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனுக்கு தேவையான சிகிச்சையை செய்து முடித்தனர்.