ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ராதா. ஆனால் சினிமாவில் பெரிதாக எதிர்காலம் இல்லாததால் பின்னர் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ராதா பின்னர் அவரை விவாகரத்து பெற்றார். அதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா என்பவரை இரண்டாவதாக திருணம் செய்து கொண்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கடந்த ஏப்ரல் அவர் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார் ராதா. அதன்பிறகு இருவரும் சமாதானமாகி சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பரங்கிமலை இணை கமிஷனர் நரேந்திரன் நாயரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார் நடிகை ராதா.
அந்தபுகார் மனுவில், தான் ஏற்கனவே கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் உள்ள தனது நண்பர்களை வைத்து அழித்து விட்டதாக கூறிய வசந்தராஜா, போலீசில் புகார் கொடுத்து என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருப்பவர், வசந்தராஜா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் இளம்வருதி, பாரதி ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.