2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் கைதி. எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கும், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கும் கேரளா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காரணம், கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர், 2007ஆம் ஆண்டு புழல் சிறையில் தனக்கு நேர்ந்த சம்பவங்களை தொகுத்து ஒரு கதையாக எழுதி அதை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடத்தில் சொல்லியிருக்கிறார். கதை பிடித்ததால் அதை படமாக்கலாம் என்று சொல்லி அவருக்கு ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார் எஸ்.ஆர்.பிரபு. ஆனால் அதன்பிறகு அவரை அழைக்கவே இல்லையாம்.
இந்தநிலையில் சமீபத்தில் கைதி படத்தைப் பார்த்த ராஜீவ் ரஞ்சன் தான் சொன்ன அதே கதையின் இரண்டாம் பாதியை அப்படியே கைதி படத்தில் வைத்து படமாக்கி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதனால் தனக்கு நஷ்ட ஈடாக தயாரிப்பாளர் எஸ்.ஆ.பிரபு ரூ. 4 கோடி தர வேண்டும் என்று கேரளா மாநிலம் கொல்லம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ராஜீவ் ரஞ்சன். அவரது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.ஆர்.பிரபுவிற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, கைதி படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யக் கூடாது, அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளார்.