2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

ஒருகாலத்தில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் ஹிட் கூட்டணியாக வலம் வந்தவர்கள் தான் சூர்யாவும், இயக்குனர் கவுதம் மேனனும். துருவ நட்சத்திரம் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து, மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் நவரசா என்கிற ஆந்தாலஜி படம் ஒன்றிற்காக இவர்கள் இணைந்து உள்ளனர்.
ஒன்பது குறும்படங்கள் அடங்கிய இந்த தொகுப்பில் இவர்கள் கூட்டணியின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்தநிலையில் இந்த படத்திற்கு கிதார் கம்பி மேலே நின்று என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக, ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அனேகமாக சூர்யா பிறந்தநாளன்று இதன் டைட்டில் போஸ்டர் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.