பிளாஷ்பேக்: முதல் அம்மன் படம் | 'ராமாயணா' படத்தில் ரஹ்மானுடன் இணைந்த ஹாலிவுட் 'ஆஸ்கர்' நாயகன் | 'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் |
நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்தவர் மெஹ்ரீன் பிர்சடா. தற்போது தெலுங்கில் எப் 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இவருக்கும், பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொரோனா பிரச்னையால் திருமண தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நிச்சயதார்த்தம் நடைபெற்று மூன்று மாதத்திற்கு பிறகு பவ்யாவை பிரிவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் மெஹ்ரீன் பிர்சடா.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது : நானும், பாவ்யாவும் பிரிகிறோம். எங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம் ரத்தாகிறது. எங்களின் திருமணமும் நடக்காது. இருவரின் நலன் கருதி இருவரும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இனி பவ்யா அவரது குடும்பத்தினர் எந்த தொடர்பும் இல்லை. இனி வழக்கமான என் பணிகளை தொடர்வேன். சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பேன். என் தனிப்பட்ட சுதந்திரத்தை அனைவரும் மதிப்பீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.