'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தனது படங்களில் பாடல் காட்சிகளும் கூட பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என மெனக்கெடுபவர் இயக்குனர் ராஜமவுலி. அந்தவகையில் தற்போது ஜூனியர் என்.டிஆர், ராம்சரண் இருவரையும் ஒன்றாக இணைத்து இயக்கிவரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இன்னும் ஒரு பிரமாண்டமான பாடல் காட்சியை படமாக்க இருக்கிறாராம்.. சுதந்திர போராட்ட பின்னணியில் அமைந்துள்ள இந்தப்பாடல் கிட்டத்தட்ட எட்டு நிமிட நீளம் கொண்ட பாடலாம்.
வரலாற்று பின்னணியில் உருவாகும் படம் என்பதால், அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை பாடல் காட்சி இருந்தால் போதும் என படக்குழுவினர் சொன்னதை ஏற்றுக் கொள்ளாத ராஜமவுலி எட்டு நிமிட பாடல் இடம்பெற்றே ஆக வேண்டும் என கூறிவிட்டாராம். இந்தப்பாடல் நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து படமாக்கப்பட இருக்கிறதாம். அதனால் இந்த பாடலை படமாக்குவதற்கு மட்டுமே ஒரு மாதம் ஒதுக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி.