பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ்த் திரையுலகத்தின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்று ஹிட்டுகளைக் கொடுத்தார்.
தமிழைப் போல தெலுங்கில் அவரது அறிமுகம் சரியாக அமையவில்லை. தெலுங்கில் அவர் அறிமுகமான 'அஞ்ஞாதவாசி' படம் தோல்வியடைந்தது. அதனால், அவரைத் தேடி பல தெலுங்கு வாய்ப்புகள் வரவில்லை. இருப்பினும் அதன்பின் அவர் இசையமைத்த 'ஜெர்சி' படம் நல்ல வெற்றியைப் பெற்றது. அவருடைய இசையும் பாராட்டப்பட்டது. அதற்கடுத்து 'கேங் லீடர்' படத்திற்கும் இசையமைத்தார்.
அடுத்து தெலுங்கில் 'ஆர்ஆர்ஆர்' பட ஹீரோக்களான ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் தனித் தனியே நாயகனாக நடிக்க உள்ள புதிய படங்களுக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை கொரட்டலா சிவாவும், ராம்சரண் நடிக்க உள்ள படத்தை ஷங்கரும் இயக்க உள்ளார்கள். அதிகம் எதிர்பார்க்கப்படும் 'ஆர்ஆர்ஆர்'. படத்திற்குப் பிறகு அவர்கள் நடிக்க உள்ள படங்கள் என்பதால் இப்படங்களுக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாக உள்ளது.
தற்போது தமிழில் 'டாக்டர், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விஜய் 65, விக்ரம், இந்தியன் 2' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.