விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா? | விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை |

நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65ஆவது படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில், விஜய் 65ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளுக்கு முந்தின நாளான ஜூன் 21-ந்தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் சோசியல் மீடியாவில் இப்போதே பரபரப்பை ஆரம்பித்து விட்ட விஜய் ரசிகர்கள், இதுவரை விஜய் நடித்துள்ள 64 படங்களின் போட்டோக்களை வைத்து ஒரு ஸ்பெசல் போஸ்டரை சோசியல் மீடியாவில் டிரண்டிங் செய்கின்றனர்.
இதுஒருபுறம் இருக்க விஜய்யின் அரசியல் என்டரி குறித்த இன்னொரு போஸ்டரையும் வெளியிட்டு மேலும் பரபரப்பு கூட்டி வருகின்றனர் ரசிகர்கள். திண்டுக்கல் முழுதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற புகைப்படமும், ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட, தம்பி வா; தலைமை ஏற்க வா என்று அழைக்கும் விதமான வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தி.மு.க.,வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.