இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கமலின் திரையுலக பயணத்திலேயே அவருக்கு மகுடம் சூட்டிய படமென்றால் அவர் பத்து வேடங்களில் நடித்து, வெளியான தசாவதாரம் படம் தான். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வெளியாகி பதிமூன்று ஆண்டுகளை தொட்ட நிலையில் இந்த பட உருவாக்கம் குறித்து கமல் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருந்தார். இதற்கு ரசிகர்களை விட, அதிக அளவு ஆர்வம் காட்டி பல திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அந்தவகையில் நேரம், பிரேமம் ஆகிய படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதுடன், கமலுக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில், "கமல்ஹாசன் சார், திரைப்பட இயக்கத்தில் உங்களுடைய தசாவதாரம் படம் ஒரு பிஎச்டி என்றால், அதற்கு முன்பு வெளியான மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி படிப்பு போல, அந்தப் படத்தையும் எப்படி படமாக்கினார்கள் என எங்களுக்கு சொல்ல முடியுமா என்று கோரிக்கை வைத்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன்
தசாவதாரம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக கமல் அதிகபட்சமாக நான்கு வேடங்களில் நடித்திருந்த படம் தான் மைக்கேல் மதன காமராஜன் 90களில் வெளியான இந்த படத்தை இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். நான்கு கமல்களையும் ஒரே காட்சியில் கொண்டு வந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் கமல்ஹாசனும், இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவும் என்பது குறிப்பிடத்தக்கது.