2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அஞ்சலி. தமிழில் சில முக்கியமான படங்களில் தனது யதார்த்த நடிப்பின் மூலம் தனி முத்திரையைப் பதித்தவர். அறிமுகப்படமான 'கற்றது தமிழ்' படத்திலேயே யார் இவர் எனக் கேட்க வைத்தவர். தொடர்ந்து “அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, இறைவி, பேரன்பு” என சில படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டைப் பெற்றது.
சில நல்ல படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் உயரத்திற்குச் சென்றிருக்க வேண்டியவர். சில தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக சென்னையை விட்டு ஐதராபாத்திற்கு இடம் பெயர்ந்தார். தெலுங்கிலும் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழைப் போலவேதான் அங்கும் அவருடைய மார்க்கெட் நிலவரம் இருக்கிறது. இடையில் அவ்வப்போது காதல் கிசு கிசு வேறு.
தமிழ் சினிமாவில் ஷோபா, சரிதா போன்று ஜொலிக்க வேண்டியவர் தன் நிலையை உயர்த்திக் கொள்ள கொஞ்சம் சறுக்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
டுவிட்டரில் அஞசலியைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது. டாப் ஹீரோக்கள் ஜோடியாக அதிகப் படங்களில் நடிக்காமலேயே அஞ்சலி 1 மில்லியன் பாலோயர்களைக் கடந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
டுவிட்டரில் 1 மில்லியன் மற்றும் அதற்கு மேல் பாலோயர்களைக் கொண்ட சில முக்கிய நடிகைகள்.
சமந்தா - 8.8 மில்லியன்
ஸ்ருதிஹாசன் - 7.8 மில்லியன்
த்ரிஷா - 5.3 மில்லியன்
தமன்னா - 5 மில்லியன்
ஹன்சிகா - 5 மில்லியன்
காஜல் அகர்வால் - 4.8 மில்லியன்
கீர்த்தி சுரேஷ் - 3.9 மில்லியன்
ஐஸ்வர்யா ராஜேஷ் - 2.1 மில்லியன்
அமலா பால் - 2.1 மில்லியன்
சாய் பல்லவி - 1.9 மில்லியன்
ராய் லட்சுமி - 1.8 மில்லியன்
ராஷி கண்ணா - 1.3 மில்லியன்