கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை |
தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற சில படங்களின் இரண்டாம் பாகப் படங்களை எடுக்க வேண்டும் என்ற ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பல இரண்டாம் பாகப் படங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றில் சில படங்கள் தான் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. சில படங்கள் சுமாரான வெற்றியையும், சில படங்கள் மோசமான தோல்வியையும் சந்தித்துள்ளன.
தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற 'இந்தியன், இம்சை அரசன் 23ம் புலிகேசி' ஆகிய இரண்டு படங்களின் இரண்டாம் பாகப் படங்களும் இயக்குனர் ஷங்கர் சம்பந்தப்பட்டவை. 'இந்தியன் 2' படத்தின் இயக்குனராகவும், 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தின் தயாரிப்பாளராகம் அவர் இருக்கிறார். இயக்குனராக தயாரிப்பாளருடன் பிரச்சினை, தயாரிப்பாளராக ஹீரோவுடன் பிரச்சினை என அப்படங்கள் அப்படியே நிற்கின்றன.
'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்திற்கு வடிவேலு சொன்னபடி நடித்துத் தராததால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு நஷ்ட ஈடு கேட்டார் ஷங்கர். இப்போது அந்த நஷ்ட ஈட்டை வடிவேலு தர சம்மதித்துவிட்டார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலுவுக்கு அறிவிக்கப்படாத 'ரெட் கார்டு' வழங்கப்பட ஷங்கர் தான் காரணம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
தயாரிப்பாளராக தன்னை காப்பாற்றிக் கொள்ள முயலும் ஷங்கர் அது போலவே 'இந்தியன் 2' தயாரிப்பாளரையும் காப்பாற்ற வேண்டுமல்லவா என்ற குரலும் எழுகிறது.
மூன்றாவது படமாக 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றதுடன் அப்படியே நிற்கிறது. படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான விஷாலுடன் சண்டை போட்டு அப்படத்திலிருந்து விலகினார் மிஷ்கின். அதன்பின் அப்படத்தைத் தானே இயக்கப் போவதாக விஷால் சொன்னார்.
ஆனால், அந்தப் படத்தை இயக்காமல் 'எனிமி' படத்தில் நடித்து முடித்துவிட்டு, அடுத்ததாக அவரது 31வது படத்தில் நடிக்கப் போய்விட்டார். 'துப்பறிவாளன் 2' நடக்குமா, நடக்காதா விஷால் கையில்தான் உள்ளது.
தமிழ் சினிமாவில் மூன்று முக்கிய இரண்டாம் பாகப் படங்கள் இப்படி நின்று போயுள்ளது ரசிகர்களுக்கு வருத்தமான ஒன்றுதான்.