2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கொரோனாவால் மரணிக்கும் திரைப்பிரபலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்று(ஜூன் 17) தொரட்டி படம் நாயகன் ஷமன்மித்ரு (வயது 43) காலை 6 மணிக்கு உயிரிழந்தார்.
சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவரான ஷமன்மித்ரு தமிழ், தெலுங்கு , கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தன்னை முழுமையாக அடையாளப்படுத்தி கொள்ள தொரட்டி படத்தை தயாரித்து, கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு இருந்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், 5 வயதில் மோக்ஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
கே.வி.ஆனந்த், மாறன், சேலம் சந்திரசேகர், பாண்டு, குட்டி ரமேஷ், நிதிஷ் வீரா, வெங்கட் சுபா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனாவால் மரணம் அடைந்த நிலையில் இப்போது இவரின் மரணமும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.