நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
இந்தியன் 2 பட விவகாரத்தில் அப்படத்தை முடித்துக் கொடுப்பதற்கு முன்பு டைரக்டர் ஷங்கர் வேறு படம் இயக்கும் பணிகளில் இறங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கு குறித்த விசாரணை நிலுவையில் இருக்கிறது.
இதற்கிடையே தெலுங்கில் தில் ராஜூ தயாரிப்பில் ராம் சரண் நடிக்கும் பட வேலைகளில் ஷங்கர் ஈடுபட்டிருப்பதால் தற்போது ஐதராபாத் நீதிமன்றத்திலும் ஷங்கர் படம் இயக்குவதற்கு எதிராக இன்னொரு வழக்கைத் தொடர்ந்துள்ளது லைகா நிறுவனம்.
இதுகுறித்து டைரக்டர் ஷங்கரின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்தியன்-2 பட சம்பந்தமான வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ஒரு புகார் அளித்திருக்கிறார்.
இதையடுத்து, லைகா நிறுவனம் சார்பிலும் நிலுவையில் உள்ள வழக்கை தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதியோ, ஏற்கனவே நிலுவையில் இருக்கும் தடை கோரிய வழக்கின் விசாரணையில் தீர்வு கண்ட பிறகுதான் மேல்முறையீட்டு விசாரணைக்கு எடுக்க முடியும் என்று சொல்லிவழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளார்.