இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ். ஜெயசித்ரா இயக்கத்தில் நானே என்னுள் இல்லை என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இசை அமைப்பாளர் ஆனார். மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2, பொட்டு, பரமபதம் விளையாட்டு உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். தற்போது கர்ஜனை, யங் மங் சங், சம்பவம், பாம்பாட்டம் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிய வகை இரிடியம் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் 26 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அம்ரேஷ் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் "என் மீது புகார் அளித்த நெடுமாறனிடம் நான் வாங்கிய 2 கோடியே 20 லட்சத்தில் அவருக்கு நான் திருப்பி கொடுத்தது போக மீதமுள்ள 62 லட்சத்திற்கு வரைவோலை கொடுத்து விட்டேன். அவரும் தன் புகாரை வாபஸ் பெற்று விட்டார். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். என்று கூறியிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
அம்ரேஷ் மீது 26 கோடி ரூபாய் வரை மோசடி குற்றச்சாட்டு கூறப்பட்டபோதும் முறைப்படி புகாராக பதிவு செய்யப்பட்டது நெடுமாறனிடம் பெற்ற 2 கோடியே 20 லட்சம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.