கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் |

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் சென்னை, தியாகராயநகர் துணை ஆணையரிடம் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி. பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஜீவாவின் தந்தை ஆவார். இவர் படங்களுக்கு பைனான்ஸூம் செய்து வருகிறார்.
நடிகர் விஷால் தயாரித்த சில படங்களுக்கு ஆர்.பி.சவுத்ரி நிதி உதவி செய்துள்ளார். இதற்காக ப்ரோட் நோட் பத்திரம் பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கொடுத்த பின்னரும் ப்ரோநோட் பத்திரத்தை தராமல் ஆர்.பி.சவுத்ரி இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விஷால் பல முறை அவரிடம் முறையிட்டும் திருப்பி தரவில்லை.
இதனால் ப்ரோநோட் பத்திரத்தை வைத்து மோசடி செய்ய திட்டமிடுவதாக கூறி சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி மீது தியாகராயநகர் துணை ஆணையரிடம் நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார்.