தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் |

சரியான சிகிச்சை அளிக்கவில்லை, தடுப்பூசி மறுக்கப்படுகிறது என்கிற காரணங்களை சொல்லி மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், செவிலியர்களை தாக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த தாக்குதல் குறித்து பாலிவுட் நடிகர், நடிகைகள் கண்டனங்களையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள். தமிழில் நடித்த அமைரா தஸ்தூரும் தன் கண்டத்தை தெரிவித்திருக்கிறார்.
தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர் மீண்டும் தற்போது தமிழில் காதலை தேடி நித்யானந்தா, பகீரா படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்ட்ராகிராமிலல் கூறியிருப்பதாவது: டாக்டர்கள், செவிலியர்கள் தாக்கப்படுவது மனவருத்தத்தை தருகிறது. டாக்டர்கள், செவிலியர்கள், தங்கள் குடும்பங்களை மறந்து, தனக்கு எந்த நேரத்திலும் தொற்று ஏற்படலாம் என்பதை அறிந்து உயிரை பணயம் வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குடும்பங்கள் தவித்து வருகிறது. பாதுகாக்கப்பட வேண்டியர்களை, தாக்குவது கண்டனத்துக்குரியது. டாக்டர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் பணிகளையும் நாம் முழுமைகாய புரிந்து கொண்டால் இத்தகைய சம்பவங்கள் நடக்காது.
எனது தந்தையை கொடும் தொற்றில் இருந்து அவர்கள் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் பட்ட கஷ்டத்தை, கடும், உழைப்பை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். அதோடு டாக்டர்கள், செவிலியர்களுடன் எடுத்துக் கொண்ட குரூப் போட்டாவையும் வெளியிட்டிருக்கிறார்.