நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

கொரோனா காலகட்டம் தொடங்கியதில் இருந்தே சோசியல் மீடியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல்களை வெளியிட்டு வருகிறார் வரலட்சுமி. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஆதரவற்ற நாய்களுக்கு அளிப்பதற்காக 2 டன் உணவுப் பொருட்களை வழங்கிய வரலட்சுமி, கொரோனா, ஹெல்ப்லைன் குறித்த தகவல்களையும் பதிவிட்டிருந்தார்.
அதையடுத்து தற்போது கொரோனா தடுப்பூசி குறித்து வீடியோ ஒன்றை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இரண்டு பேர் உரையாடுவது போன்று அமைந்துள்ள அந்த வீடியோவில் வரலட்சுமியே டபுள் ஆக்சன் கொடுத்துள்ளார். அதில், ‛‛கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பாதிக்கப்படுகிறார்களாமே. அதோடு, பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் சொல்கிறார்களே? என்று ஒரு வரலட்சுமி கேட்கிறார். அதற்கு இன்னொரு வரலட்சுமி, ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் விபத்து ஏற்படாது என்பதல்ல. ஆனால் விபத்து ஏற்பட்டாலும் உயிர்பிழைத்து விடுவார்கள். அதேபோல் தடுப்பூசி போட்டு கொரோனாவினால் பாதிக்கப்பட்டாலும் உயிர்பாதிப்பு ஏற்படாமல் அதை குணப்படுத்தி விட முடியும் என்கிறார். அதைக் கேட்டு தெளிவுபெறும் இன்னொரு வரலட்சுமி அப்படியென்றால் நாளைக்கே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறேன்'' என்று அவரிடத்தில் தெரிவிக்கிறார். இப்படியொரு கொரோனா விழிப்புணர்வு வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி.