புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு இருக்கும். இதுவரை மிஷன் இம்பாசிபிள் 6 பாகங்கள் வெளிவந்திருக்கிறது. தற்போது இதன் 7வது பாகம் தயராகி வருகிறது. 6வது பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குயரோ 7வது பாகத்தையும் இயக்குகிறார்.
அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததால் படத்தின் படப்பிடிப்புகள் லண்டன் அருகில் உள்ள ஒரு கைவிடப்பட்ட விமான நிலையத்தில் ஷெட் அமைத்து படமாக்கப்பட்டு வந்தது. பல லட்சம் டாலரில் இங்கு ஒரு பிலிம் சிட்டியே உருவாக்கப்பட்டு, அங்கு செல்வோர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கடும் கட்டுப்பாடுகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக படத்தில் இடம்பெறும் ஒரு நைட்கிளப் காட்சியை படமாக்கி வந்தனர். இதில் டாம் க்ரூஸுடன் இணைந்து 50க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடித்தனர். இவர்களில் 4 நடனக் கலைஞர்கள், 10 தொழிலாளர்கள் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் டாம் குரூஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
அவர் மீண்டும் 14 நாட்களுக்கு பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அதுவரை படப்பிடிப்பு குழுவினரும் லண்டனிலேயே தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் படத்தை தயாரிக்கும் பேரமவுண்ட் நிறுவனத்திற்கு பெரும் பண இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.