சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
திருமணம் பலரது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும். மனமொத்த தம்பதிகளின் வாழ்க்கை இனிமையாகவே அமையும். தொடர்ந்து பல கல்யாண கிசுகிசுக்கள் வந்த நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் கௌதம் கிச்லு என்பரைத் திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.
பின்னர், தேனிலவுக்காக மாலத் தீவிற்கு கணவருடன் சென்று அங்கு இரண்டு வாரங்களுக்கும் மேல் தங்கி, தினமும் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்து அவரது ரசிகர்களை மகிழ்வித்தார்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மும்பையில் தனது கணவருடன் ஜாலியாக பொழுதைக் கழித்து வருகிறார். வழக்கம் போல் அடிக்கடி ஏதாவது அப்டேட்டுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நேற்று கணவருடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பதிவிட்டு, “கணவரைப் பாராட்டும் பதிவு” என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகைப்படங்களில் ஒரு முத்தப்படமும் உண்டு.