பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
சில ஆண்டுகளுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இது நாள் வரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொடர்ந்து சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பதிவிட்டு வருகிறார் சின்மயி. இந்நிலையில் மலையாளத்தில் ஞானபீட விருது பெற்ற கவிஞர் ஓஎன்வி குறுப்புவின் பெயரில் வழங்கப்படும் இலக்கியத்திற்கான விருது இந்தாண்டு இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறுகையில், ஓ.என்.வி. ஐயா எங்களின் பெருமை. அவரின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது. இப்படிப்பட்ட கவுரவமான விருதை பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு வழங்குவது அவமரியாதையாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இன்ஸ்டாவில், ‛‛பதினேழுக்கும் அதிகமான புகார்கள் அவர் மீது வந்துள்ளன. இதில் பல புகார்கள் தவறானவையாக கூட இருக்கலாம். ஆனால் இங்கே அதிகாரத்தில் இருக்கும் ஒருவருடைய நற்பெயர் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதே தவிர, அவரது மனித நேயம் அல்ல,,, கலை பெரிதா, கலைஞன் பெரிதா என என்னுடன் விவாதிக்க முற்பட்டால், மனிதநேயத்துடன் கூடிய ஒருவன் உருவாக்கும் கலை தான் சிறந்தது என்பேன். அடூர் கோபாலகிருஷ்ணனோ அல்லது விருதுக்குழு நடுவரோ யார் தீர்மானித்தது, குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்துவுக்கு இந்த பெருமையை வழங்குவதற்கு..?” என விமர்சனத்துடன் கூடிய கேள்வியையும் எழுப்பியுள்ளார் பார்வதி.