சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பொதுவாக சமூக வலைத்தளங்களில் நடிகர்களைவிட நடிகைகளே அதிகம் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அவர்கள் பதிவிடும் கவர்ச்சி படங்களின் காரணமாக அவர்களை கோடிக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.
நடிகர்களை பொறுத்தவரையில் தங்கள் படம் தொடர்பான தகவல்கள், வெளியிடும் சமூக கருத்துக்களுக்காக பின் தொடர்வார்கள். இந்த இரண்டையும் தாண்டி இளம் ஹீரோக்களுக்கு ரசிகைகள் ஏராளமாக இருந்தால் அவர்களை பின் தொடர்கிறவர்களும் அதிகமாக இருப்பார்கள்.
அந்த வகையில் தென்னிந்திய ஹீரோக்களில் இன்ஸ்ட்ராகிராமில் 12 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. 11.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் அல்லு அர்ஜுன் இரண்டாவது இடத்திலும், மகேஷ் பாபு 6.7 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
கீதா கோவிந்தம், அர்ஜூன் ரெட்டி, நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ள விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லிகர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், அலி, மகரந்த் தேஷ்பாண்டே, கெட்அப் ஸ்ரீனு மற்றும் அப்துல் குவாதிர் அமீன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.