மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி உதவி அளிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யா - கார்த்தி குடும்பத்தினர், முருகதாஸ், உதயநிதி, வெற்றிமாறன், ஜெயம் ரவி குடும்பம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து நிதி உதவி அளித்தனர். நடிகர் அஜித் வங்கி பணபரிவர்த்தனை மூலம் நிதி உதவி வழங்கினார்.
இன்று நடிகர் ரஜினிகாந்த் தன் பங்கிற்கு ரூ.50 லட்சம் நிதியை முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கினார். இவரை தொடர்ந்து நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். வங்கி பணபரிவர்த்தனை மூலம் இந்த தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நடிகர் விக்ரம் தற்போது அவரின் 60வது படத்தில் தனது மகன் உடன் நடித்து வருகிறார். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கடந்தவாரம் தனது மகன் துருவ் உடன் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டு வந்தார் நடிகர் விக்ரம்.