தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் |
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த வருட கொரோனா தொற்றின் முதல் அலை ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டாவது அலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
கடந்த வருட கொரோனாவிற்கே தியேட்டர்களை சுமார் 8 மாதங்கள் வரை மூடி வைத்திருந்தார்கள். இந்த இரண்டாவது அலையில் கடந்த 20 நாட்களாக தியேட்டர்களை மூடி வைத்திருக்கிறார்கள். இந்த அலையின் தாக்கம் ஜுலை வரையிலும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
அதன்பிறகு கொரோனா தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் தான் அதற்கடுத்த சில மாதங்களிலாவது தியேட்டர்களைத் திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். ஏற்கெனவே கடந்த வருடம் 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டாலும் ஓரிரு படங்கள் மட்டும் தான் லாபத்தைத் தந்தன.
பல தியேட்டர்களை திறக்காமலேயே வைத்திருந்தார்கள். இந்த வருடமும் அப்படிய நீடித்தால் நூற்றுக்கணக்கான தியேட்டர்களை நிரந்தரமாக மூடும் அபாயம் இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாவும் சினிமா தொழிலையும், தியேட்டர்களையும் நம்பி பல குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
முதல் அலையின் போதே மீள முடியாத தியேட்டர்கள் இந்த இரண்டாவது அலையில் மீள்வது அவ்வளவு எளிதல்ல என்பதுதான் நிதர்சனமான உண்மை.