ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தமிழ் சினிமாவின் வசூல் நடிகர்களில் முதன்மையானவர் என்ற பெயரை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நேற்று தான் ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார். சிறிது ஓய்விற்குப் பிறகு ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலில் இறங்காத காரணத்தால் இன்னும் சில படங்களில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று ஏற்கெனவே சொல்லப்பட்டது. அண்ணாத்த படத்திற்குப் பிறகு அவர் யாருடைய தயாரிப்பில், யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற பேச்சு இப்போதே எழுந்துவிட்டது.
அமெரிக்கா செல்வதற்கு முன்பாகவே அடுத்த படம் என்ன என்பதை ரஜினிகாந்த் முடிவு செய்வார் என்றும் தெரிகிறது. அமெரிக்காவிலிருந்து திரும்பியதுமே புதிய படத்தில் நடிக்க ஆரம்பிப்பார் என்றும் சொல்கிறார்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில் ரஜினிகாந்த்தை வைத்து படம் தயாரிக்க அவருடைய மருமகன் தனுஷ், கலைப்புலி தாணு உள்ளிட்ட சிலர் தயாராக இருப்பதாகக் கேள்வி. அதே போல ரஜினிகாந்த்தை சந்தித்து சில இயக்குனர்கள் ஏற்கெனவே கதை சொல்லியிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.
ரஜினிகாந்தின் சம்பளம் 100 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். அவரை வைத்து படம் தயாரித்தால் குறைந்தபட்சம் 200 கோடி ரூபாய் பட்ஜெட் வேண்டும். அதற்கு யார் தயாராக இருக்கிறார்களோ அவர்களது படத்தில் மட்டும்தான் ரஜினிகாந்த் நடிக்க முடியும்.
தன்னை வைத்து ஏற்கெனவே படங்களைத் தயாரித்தவர்களுக்கு முன்னுரிமை தருவாரா, இதுவரை தன்னை இயக்காத இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவாரா என்று கோலிவுட்டில் காத்திருக்கிறார்கள்.