சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
அஜித் நடித்த சிட்டிசன், ஷாம் நடித்த ஏபிசிடி படங்களை இயக்கியவர் ஷரவண சுப்பையா. அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாததால் நடிப்பின் பக்கம் கவனத்தை திருப்பி குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 15 வருடங்களுக்கு பிறகு அவர் இயக்கும் படம் "மீண்டும்". இதில் ஒன்பதில் இருந்து பத்துவரை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கதிரவன் ஹீரோவாக நடித்திருக்கிறார். நாயகியாக நட்பே துணை படத்தில் நடித்த அனகா நடிக்கிறார். இவர்கள் தவிர இயக்குனர்கள் எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்பிரமணியம் சிவா, கேபிள் சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படம் பற்றி இயக்குனர் ஷரவண சுப்பையா கூறியிருப்பதாவது: தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருந்ததால் இயக்கம் பற்றி யோசிக்கவில்லை. ஆனாலும் என் கையில் நிறைய கதைகள் இருந்தது. ஒன்பதில் இருந்து பத்து வரை படத்தில் நடித்தபோது அந்த படத்தில் நடித்த கதிவரன் எனக்கு அறிமுகனார். அவர் பல படங்களில் நடித்தும், தயாரித்தும் நிறைய பணத்தை இழந்திருந்தார். இழந்த பணத்தை மீட்கவும், ஒரு ஹீரோவாக ஜெயிக்கவும் எனக்கு ஒரு படம் பண்ணித் தாருங்கள் என்று கேட்டார்.
என்னிடம் இருந்த கதை ஒன்றை அவரிடம் கூறி, இதில் வரும் கடைசி 15 நிமிட கிளைமாக்சுக்கு உயிரை பணயம் வைத்து நடிக்க முடியுமா என்று கேட்டேன். காரணம் இதே கதையை பல பெரிய ஹீரோக்களிடம் சொன்னேன். அவர்களும் கதை நன்றாக இருக்கிறது. கிளைமாக்சை மாற்றுங்கள் என்றார்கள். நான் மாற்ற சம்மதிக்காததால் அவர்களும் நடிக்க மறுத்து விட்டார்கள். கதிரவன் ஒப்புக்கொண்டு நடித்தார். இதற்காக அவர் ஒருவருடம் வரை பயிற்சி எடுத்து தன்னை தயார்படுத்திக் கொண்டார். படம் வெளிவரும்போது அந்த கிளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும். என்றார்.