வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! | கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! |
குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பாக கோகுல கிருஷ்ணன் மற்றும் கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தி நைட் எனும் படத்தை தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் தயாரிக்கிறார்கள். வசனம் எழுதி இயக்குகிறார் ரங்கா புவனேஷ்வர். இவர் தமிழில் ஆறாவது வனம் மற்றும் மலையாளத்தில் சில படங்களும் இயக்கி இருக்கிறார்.
இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக விது என்கிற பாலாஜி அறிமுகமாகிறார். நாயகியாக சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். மேலும் மதுமிதா , ரன்வீர் குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக அன்வர் கான்டாரிக் அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் ரங்கா புவனேஸ்வர் கூறியதாவது: இது தமிழில் இதுவரை சொல்லமறந்த, சொல்லப்பட வேண்டிய கதையுடன் கூடிய திரைப்படம். இது காடுகள் சார்ந்த கதைக்களம் ப்ளஸ் கம்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த அனிமல் திரில்லர். பல சுவாரஸ்யமான சம்பவங்களோடு யாரும் யோசிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்தது.
கொரோனா காலகட்டத்திலும் இக்கட்டான சூழ்நிலையில் கடுமையான குளிரில் பல போராட்டமான நிகழ்வுகளோடு தொழில்நுட்பக் கலைஞர்களும், தொழிலாளர்களின் ஒத்துழைப்புடனும் இடைவிடாது 30 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளோம். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் நடைபெற உள்ளது. என்றார்.