‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை சுனாமி போன்று வேகம் எடுத்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இயக்குனர் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுப்பற்றி பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு டுவிட்டரில், ‛‛என் பெற்றோர் பாக்யராஜ் - பூர்ணிமாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எங்கள் வீட்டு பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டு தனிமையில் உள்ளோம். கடந்த 10 நாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறோம். இவர்கள் சீக்கிரம் குணமாக பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இயக்குனர் பாக்யராஜ். ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் சாந்தனு நடிகராக உள்ளார்.