300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. தனிபெரும்பான்மை உடன் திமுக., இன்று(மே 7) ஆட்சியில் அமர்ந்தது. முதன்முறையாக திமுக., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவகுமாரும் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு சில வேண்டுகோளும் வைத்துள்ளார். அதன் விபரம் வருமாறு...
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் அவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். 1996-ல் திமுக 172 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதற்குப் பின் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கருணாநிதி இறந்த பிறகு 125 இடங்களில் தனிபெரும் கட்சியாக தற்போது திமுக வெற்றி பெற்றது ஸ்டாலினின் அவர்களுடைய இமாலய சாதனை. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று, தாத்தாவிற்கேற்ற பேரன் என்பதை நிரூபித்துள்ளார்.
முதலமைச்சர் அவர்களுக்கு முதலிலே எனது வேண்டுகோள். கொரோனா காலத்திலிருந்து நம்ம மக்களை காப்பாத்துங்க. மருத்துவமனைகளிலும் மருந்துகடைகளிலும் காலையிலிருந்து, மாலைவரைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை. படுக்கை இருந்தா ஆக்ஸிஜன் இல்லை. ஆக்ஸிஜன் இருந்தா வெண்டிலேட்டர் இல்லை. இந்த காலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க.
இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, நடிகர் சிவகுமார் அவர்களின் வாழ்த்து. @mkstalin #tamilnaducm #TamilNadu #sivakumar #actorsivakumar pic.twitter.com/QQvO7d6jkS
— Johnson PRO (@johnsoncinepro) May 7, 2021
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
![]() |
நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை
முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைக்கட்டி முன்நிற்க, சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். சுவாசிப்பதற்கு உயிர் காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில் நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்.