இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் 8 தோட்டாக்கள். ஸ்ரீ கணேஷ் என்ற புதுமுகம் இயக்கி இருந்த இந்தப் படத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர், மீரா மிதுன், நாசர், மைம்கோபி உள்பட பலர் நடித்திருந்தார்கள். வெற்றிவேல் சரவணா பிலிம்ஸ் சார்பில் எம்.வேலப்பன் தயாரித்திருந்தார்.
இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சிரஞ்சீவியின் ஆடை வடிவமைப்பாளரும், தெலுங்கு தயாரிப்பாளருமான சுஷ்மிதா கொனிடெலா இதன் ரீமேக் உரிமத்தை பெற்றுள்ளார். தனது கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் இதனை தயாரிக்கிறார். இதற்கு முன் இவர் ஷூட்-அவுட் அட் அலேர் என்ற வெப் சீரிசை தயாரித்தார். தற்போது 8 தோட்டாக்கள் படத்தில் நடிக்கும், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்.