பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி | 'மிஸ்டர்.பாரத்' படப்பிடிப்பு நிறைவு : லோகேஷ் கனகராஜ் நேரில் வாழ்த்து | நிவின் பாலி மீது பணமோசடி வழக்கு | ஒரு வருடத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்: கிறிஸ்டோபர் நோலன் புதிய சாதனை | பிளாஷ்பேக்: பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன் | பிளாஷ்பேக் : நாட்டியத்தால் சினிமாவை இழந்த பி.கே.சரஸ்வதி | தலைவன் தலைவி Vs மாரீசன் - அடுத்த வாரப் போட்டி…! | இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' |
மதுர்யா புரோடக்ஷ்ன்ஸ் சார்பில் மனோ கிருஷ்ணா தயாரிப்பில், தேவகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நான் வேற மாதிரி. கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நாயகியாக மேக்னா எலன் நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நரேன், மனோ பாலா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை பற்றி இயக்குநர் தேவகுமார் கூறுகையில், ‛‛நான் இதற்கு முன்பாக மலையாளத்தில் சிக்னல் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது படம். இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவாக்கப் பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையை சார்ந்ததாகும். நாயகியை மூன்று நண்பர்கள் காதலிக்கிறார்கள். மூன்று பேர் காதலையும் அவள் ஏற்றுக் கொள்கிறாள் ஏன் எதற்காக என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ். படத்திற்கு பரிமள வாசன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு கார்த்திகேயன். படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.