'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. தமிழில் நடித்து வரும் நிக்கி கல்ராணியின் சகோதரி. சமீபத்தில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, 3 மாத சிறை வாசத்திற்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் சஞ்சனா கல்ராணிக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தயவு செய்து யாரும் கொரோனாவை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் தக்க பாதுகாப்புடன் இருக்க வேண்டும்" என்று எழுதியிருக்கிறார்.